மும்பை போலீஸின் பாஸ்போர்ட்கிளை அலுவலகத்தின் கணினி அமைப்பை அடையாளம் தெரியாத ஒரு நபர் ஹேக் செய்து, போலீஸ் அதிகாரியின் உள் நுழைவு ஐடி மற்றும் கடவுச் சொல்லை அணுகி இருக்கிறார். அதுமட்டுமின்றி பாஸ்போர்ட் சரிபார்ப்பு முறையை ஹேக்செய்து பாஸ்போர்ட் சரிபார்ப்பு நிலுவையிலுள்ள 3 விண்ணப்பங்களை அந்நபர் அழித்ததாக போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்து இருக்கிறார்.
மத்திய அரசால் நிர்வகிக்கப்படும் ஆன்லைன் பாஸ்போர்ட் சரிபார்ப்பு முறையை ஹேக்செய்து உள் நுழைந்து 3 பாஸ்போர்ட் விண்ணப்பங்களின் சரிபார்ப்பு செயல்முறையை முடித்த அடையாளம் தெரியாத நபர் மீது வழக்குபதிவு செய்யப்பட்டு உள்ளது என அவர் கூறினார். சரிபார்ப்பு ஆவணங்கள் அழிக்கப்பட்ட 3 நபர்களும் மும்பையிலுள்ள ஆன்டாப் ஹில், செம்பூர் மற்றும் திலக்நகர் போன்ற இடங்களில் வசிப்பவர்கள் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.