முன்னதாக நடந்து முடிந்த MWC நிகழ்வில் நோக்கியா நிறுவனம் இனி பிரீமியம் ஸ்மார்ட்போன்களை தயாரிக்க போவதில்லை என்று அறிவித்திருந்தது. எனவே பட்ஜெட் ரக ஸ்மார்ட் போன்களை தயாரிப்பதில் நோக்கியா நிறுவனம் தீவிரம் காட்டி வருகிறது. இந்த நிலையில் புதிய நோக்கியா ஜி21 பட்ஜெட் ஸ்மார்ட் போனை நேற்று நோக்கியா நிறுவனம் இந்தியா பயனர்களுக்காக அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் 90Hz ரெப்ரெஷ் ரேட், ஆண்ட்ராய்டு 12 அப்டேட், மூன்று நாட்கள் தாங்கும் பேட்டரி உள்ளிட்டவை சிறப்பம்சங்களாக உள்ளது.
நோக்கியா ஜி21 அம்சங்கள் :-
இந்த ஸ்மார்ட்போனில் 720×1600 பிக்சல் ரெசலியூஷனில் 6.5 இன்ச் HD+ டிஸ்பிளே கொடுக்கப்பட்டுள்ளது. 90Hz ஹெர்ட்ஸ் ரெப்ரெஷ் ரேட் ஆதரவு இந்த டிஸ்பிளேயில் உள்ளது. ஆண்ட்ராய்டு 11 இயங்குதளம் புதிய நோக்கியா ஸ்மார்ட்போனில் நிறுவப்பட்டுள்ளது. மேலும் பயனர்களுக்கு விரைவில் ஆண்ட்ராய்டு 12 பதிப்பும் கிடைக்கும் என்று நோக்கியா நிறுவனம் உறுதிபட தெரிவித்துள்ளது. அதோடு மட்டுமில்லாமல் Unisoc T606 சிப்செட், ஸ்மார்ட் போனை இயக்குவதற்காக நிறுவப்பட்டுள்ளது.
நோக்கியா ஜி21 கேமரா :-
இந்த ஸ்மார்ட்போனின் பின்பக்கம் டிரிபிள் கேமரா அமைப்பு கொடுக்கப்பட்டுள்ளது. அதில் 2MP மெகாபிக்சல் மேக்ரோ சென்சாரும், 2MP மெகா பிக்சல் டெப்த் சென்சாரும், 50MP மெகாபிக்சல் f/1.8 சென்சாரும் அடங்கியுள்ளது. அதேபோல் 8MP மெகாபிக்சல் கேமரா செல்ஃபி மற்றும் வீடியோ அழைப்புகளுக்காக கொடுக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் கைரேகை சென்சார் பக்கவாட்டில் கொடுக்கப்பட்டுள்ளது. இதில் OZO ஆடியோ அம்சமும், 5,050mAh பேட்டரியும் உள்ளது. அதோடு மட்டுமில்லாமல் 18W பாஸ்ட் ஜார்ஜிங் ஆதரவும் பேட்டரியை ஊக்குவிப்பதற்காக கொடுக்கப்பட்டுள்ளது. சுமார் மூன்று நாட்கள் வரை இந்த பேட்டரி சாதாரண பயன்பாட்டிற்கு நீடித்திருக்கும் என்று நோக்கியா நிறுவனம் விளம்பரப்படுத்தியுள்ளது.
நோக்கியா ஜி21 ஸ்மார்ட் போன் விலை :-
நோக்கியா ஜி21 ஸ்மார்ட் போன் இரண்டு வேரியண்ட்டுகளில் வெளியாகியுள்ளது. அதாவது, 6GB+128GB வேரியண்டின் விலை ரூ. 14,999 ஆகவும், 4GB+64GB வேரியண்டின் விலை ரூ. 12,999 ஆகவும் விற்பனைக்கு பட்டியலிடப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன்கள் Dusk, Nordic Blue ஆகிய இரு நிறங்களில் கிடைக்கும்.
சலுகை :-
நோக்கியாவின் பிரத்தியேக நோக்கியா பவர் இயர்பட்ஸ் இந்த ஸ்மார்ட் போனுடன் இலவசமாக வழங்கப்படுகிறது. ஆனால் இந்த ப்ளூடூத் இயர்பட்ஸ் நீங்கள் தனியாக வாங்கும் போது அதன் அசல் விலை மட்டும் ரூ. 3,599 ஆகும்.