Categories
சென்னை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

3 நாட்கள் பாருங்க….. இல்லனா உடனே போயிருங்க….. அலார்ட் கொடுத்த ராதாகிருஷ்ணன்…!!

கொரோனா அறிகுறி தெரிந்தால் 3 நாட்களில் கட்டாயமாக மருத்துவரை அணுக வேண்டும் என சுகாதாரத்துறை செயளாலர் ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.

இன்று தமிழகம் முழுவதும் ஜூலை 30ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனைதொடர்ந்து  எல்லா மாவட்டங்களிலும் சோதனை சாவடிகள் கூடுதலாக அமைத்து காவல்துறையினர் கண்காணித்து வருகின்றனர். கொரோனா தொற்று அதிகம் உள்ள சென்னை மாவட்டத்திலும் சோதனைகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. மேலும் கிருமிநாசினி தனிமைபடுத்தப்பட்ட பகுதிகளில்  தெளிக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.

தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், சென்னையில் நடைமுறையில் இருக்கும் பாதுகாப்பு பணிகளை ஆய்வு செய்து வருகையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய போது, தற்போது அமல்படுத்தப்பட்ட ஊரடங்கால் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை குறைந்திருப்பதாக தெரிவித்தார்.காய்ச்சல்,இருமல் ,உடல் சோர்வு,உள்ளிட்ட அறிகுறிகள் இருந்தால் மறைக்காமல் 3 நாளுக்குள் மருத்துவரை அணுகி உரிய சிகிச்சை பெற்றுக்கொள்ளுமாறு அவர் குறிப்பிட்டுள்ளர்.

மேலும் அரசு நடைமுறைப்படுத்தும் நடவடிக்கைகளுக்கு மக்கள் ஒத்துழைப்பு தர வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார். அரசு வெளியிட்டுள்ள பாதுகாப்பு நடவடிக்கைள் அனைத்தையும் கடைபிடித்து, கட்டாயமாக வெளியில் செல்லும் போது முககவசம் அணிந்து செல்லவேண்டும் இதன் மூலமாக கொரோனா  தொற்று பரவுவதை நாம் கட்டுப்படுத்த முடியும் என்று அவர் கூறினார்.

Categories

Tech |