Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

3 நாட்கள் நடைபெறும் சதுரங்க போட்டி…. கலந்துகொள்ளும் சிறுவர்கள்…. !!!!

மாநில அளவிலான சதுரங்கப் போட்டியில் வெற்றி பெறும் சிறுவர்கள் தேசிய அளவிலான போட்டியில் பங்கு பெறுவார்கள் என அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள வேலுடையார் மேல்நிலைப்பள்ளியில் வைத்து மாவட்ட சதுரங்க கழகம் சார்பில் மாநில அளவிலான சதுரங்க போட்டி நாளை வரை நடைபெறுகிறது. இதில் ஆன்மீகம் ஆனந்தம் அமைப்பின் தலைவர் கனகராஜ்ன், ரோட்டரி மாவட்ட தலைவர் செந்தில்குமார், தமிழ்நாடு கைப்பந்து கழகத்தின் மாநில துணைத்தலைவர் சீலர், மாவட்ட சதுரங்க கழக தலைவர் சாந்தகுமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இந்த போட்டியில் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களில் இருந்தும் 99 சிறுவர்கள் மற்றும் 46 சிறுமிகள் கலந்து கொள்கின்றனர். இதில் வெற்றி பெறும் சிறுவர்-சிறுமிகள் அடுத்தமாதம் ராஜஸ்தான் மாநிலத்தில் நடைபெறும் தேசிய அளவிலான போட்டியில் பங்கு பெறுவார்கள் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Categories

Tech |