பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் உருவாகி இருக்கும் சர்தார் படம் தீபாவளி ஸ்பெஷலாக வெளியாகியிருந்தது. அப்பா-மகன் என இருவேடங்களில் நடித்துள்ள கார்த்தி டிரைலரில் கூட கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு 16 கெட்டப்புகளில் நடித்து இருக்கிறார். முக்கிய சமுதாய பிரச்சினையை கையில் எடுத்துள்ள இத்திரைப்படத்தில் கார்த்தி ரகசிய உளவாளியாக நடித்து உள்ளார். இந்த படம் வெளியாகி 3 தினங்கள் ஆகிவிட்டது.
பொன்னியின் செல்வனை தொடர்ந்து மக்கள் கார்த்தியின் சர்தார் திரைப்படத்தை கொண்டாடி வருகின்றனர். கார்த்தியின் திரைப் பயணத்தில் ஹிட் அடித்த திரைப்படங்களில் சர்தார் முக்கியமான இடத்தை பிடித்து உள்ளது. அதாவது படம் வெளியாகி 3 நாள் முடிவில் தமிழ்நாட்டில் மட்டுமே ரூபாய். 14 கோடி வரை வசூலித்துள்ளதாம். விமர்சனங்களால் நல்ல ரீச் பெற்றுள்ள சர்தார் தீபாவளி விடுமுறைகளில் நல்ல வசூல்வேட்டை செய்யும் என்கின்றனர்.