கேரள மாநிலத்தை சேர்ந்தவர் பாபு. இவர் தனது நண்பர்களோடு நேற்று முன்தினம் அங்குள்ள செரைடு மலைக்கு சாகச பயணம் சென்றுள்ளார். இந்த மலையானது மிகவும் செங்குத்தாக இருப்பதால் அந்த மலைப்பகுதிக்கு யாரும் செல்வது கிடையாது.
இந்நிலையில் பாபு தன்னுடைய நண்பர்களோடு சேர்ந்து மலையில் ஏறும்போது மிகவும் சிரமமாக இருந்ததால் பாதி வழியிலேயே இரண்டு நண்பர்கள் திரும்பிவிட்டனர். ஆனந்த் பாபு தொடர்ந்து ஏறியுள்ளார் சிறிது நேரத்திற்கு பிறகு அவரால் தொடர்ந்து ஏற முடியவில்லை என்பதனால் கீழே இறங்க தீர்மானித்துள்ளார் அப்போது கால் வலிக்கு கீழே விழுந்ததில் பாறை இடுக்கில் சிக்கிக் கொண்டார்.
இதில் அவர் காலில் காயம் ஏற்பட்டது இதனால் அவரால் பாறை இடுக்கில் இருந்து வெளியே வர முடியவில்லை. அப்போது செல்போன் நம்பர் மூலம் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தார். ஆனால் தீயணைப்பு வீரர்களால் பாபு இருக்கும் இடத்திற்கு செல்ல முடியவில்லை. இதனையடுத்து வாலிபரை மீட்பதற்காக ராணுவத்தின் உதவியை கேரள அரசு கேட்டது. இந்நிலையில் ராணுவத்தினரின் விடாமுயற்சியினால் அவர் தற்போது பத்திரமாக மீட்கப்பட்டுள்ளார்.