Categories
தேசிய செய்திகள்

3 தலைநகர் மசோதா வாபஸ்…. ஆந்திர முதல்வர் வெளியிட்ட அறிவிப்பு….!!

ஆந்திரப்பிரதேச மாநிலத்தில் கடந்த 2014 ஆம் ஆண்டு தெலுங்கானா மற்றும் ஆந்திரா என இரண்டு மாநிலங்கள் பிரிக்கப்பட்டது. அதன்பிறகு கடந்த 2019 ஆம் ஆண்டில் ஆந்திராவில் ஆட்சி அமைத்த ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி மாநிலத்தின் நிர்வாக தலைநகரம் விசாகப்பட்டினம், சட்டப்பேரவை தலைநகரம் அமராவதி மற்றும் நீதித்துறை தலைநகரம் கர்னூலையும் ஆகியவற்றை மசோதா பேரவையில் அறிவித்தது.

இதற்கு விவசாயிகள் உள்பட பலரும் எதிர்ப்புத் தெரிவித்து வந்தனர். இந்நிலையில் 3 தலைநகரம் தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட மசோதாவை ஆந்திர அரசு வாபஸ் பெற்றது. இது குறித்து பேசிய ஜெகன் மோகன் ரெட்டி, ஆந்திராவின் அனைத்து பிராந்தியங்களின் பரவலாக்கம் மற்றும் உள்ளடக்கிய வளர்ச்சி அவசியம் என்பதை நாங்கள் நம்புவதால் எங்கள் அரசு கொண்டுவந்த மசோதாவை திரும்பப் பெறுகிறோம். மேலும் விரைவில் சரியான மசோதாவை விரைவில் கொண்டு வருவோம் என்று அவர் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |