பிரபல முன்னணி நடிகை மூன்று கோடி ரூபாய் சம்பளம் கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
கர்நாடக மாநிலத்தை சேர்ந்தவர் நடிகை அனுஷ்கா. தனது குடும்பத்துடன் பெங்களூரில் வசித்து வந்தார். தமிழ், தெலுங்கு பட உலகில் முன்னணி கதாநாயகியாக பிரபலமான பிறகு ஐதராபாத்தில் சொந்த வீடு வாங்கி வசித்து வருகிறார். தெலுங்கு, தமிழ், கன்னடம் போன்ற மூன்று மொழிகளிலும் நடித்துள்ளார். எனவே பெரிய தொகையை சம்பளமாக பெற்று வருகிறார். அவரை புதிய தமிழ் படம் ஒன்றில் நடிக்க வைப்பதற்காக பேச்சுவார்த்தைகள் நடந்தது. இப்படத்தை நட்சத்திர டைரக்டர் ஒருவர் இயக்குகிறார். இதற்காக அனுஷ்காவை சந்தித்து கதை கூறினார் இயக்குனர். கதை அவருக்கும் பிடித்துவிட்டது.
60 நாட்கள் படத்தில் நடிக்க தேவை என்று டைரக்டர் கேட்டார் அனுஷ்காவும் சம்மதம் கொடுத்தார். 60 நாள் கால் சீட்டிற்கு 3 கோடி சம்பளம் வேண்டும் என கேட்டார். சம்பளத்தை கொடுக்க டைரக்டர் தயங்கினார்.” மூன்று மொழி படங்களிலும் பிசியாக நான் நடித்து வருகிறேன். என்னுடைய படங்கள் அனைத்து மொழியிலும் ‘டப்’ செய்யப்படுகிறது”. எனவே தாராளமாக எனக்கு 3 கோடி சம்பளம் கொடுக்கலாம் என அனுஷ்கா கூறியுள்ளார்.” எனக்கு 10 கோடி சம்பளமாக கொடுக்கும்போது எனக்கு மூன்று கோடி தரக்கூடாதா?” என வாக்குவாதம் செய்துள்ளார். பின்பு அவருக்கு 3 கோடி சம்பளம் கொடுக்க தயாரிப்பாளரும் டைரக்டரும் சம்மதித்தார்கள்.