உலகப்புகழ்பெற்ற அலங்காநல்லூர், பாலமேடு, அவனியாபுரம் ஜல்லிக்கட்டு பொங்கல் பண்டிகை அன்று நடைபெறும். இந்த ஆண்டு கொரோனா காரணமாக பல்வேறு கட்டுப்பாடுகளை அரசு விதித்துள்ளது. உலகப்புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டை காண வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் உற்சாகமாக வருவதுண்டு. ஆனால் கொரோனா பரவல் காரணமாக அரசு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
அதன்படி அலங்காநல்லூர், பாலமேடு மற்றும் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு காண அந்தந்த கிராம மக்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும் என்று அமைச்சர் மூர்த்தி அறிவித்துள்ளார். உள்ளூர் அடையாள அட்டை இல்லாதவர்கள் சோதனைச் சாவடியிலேயே திருப்பி அனுப்பப்படுவர். அருகில் உள்ள கிராம மக்கள் மற்றும் வெளி மாவட்டத்தை சேர்ந்தவர்களுக்கு அனுமதி இல்லை என்றும் தெரிவித்துள்ளார். தமிழக அரசின் இந்த அறிவிப்பு பார்வையாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.