3 ஆண்டுகளாக கலை விருதுகள் வழங்கப்படாமல் இருந்த நிலையில் தற்போது மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கலை விருதுகள் வழங்கும் விழா நடைபெற்றுள்ளது.
தேனி மாவட்டத்தில் கலை பண்பாட்டுத்துறையின் சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வைத்து சிறந்த கலைஞர்களுக்கான கலை விருதுகள் வழங்கும் விழா நடைபெற்றுள்ளது. கடந்த 3 ஆண்டுகளாக கலை விருதுகள் வழங்கப்படாத நிலையில் தற்போது 3 ஆண்டுகளுக்கான விருதுகள் வழங்கப்பட்டுள்ளது. இந்த விழாவிற்கு மாவட்ட ஆட்சியர் முரளிதரன் தலைமை தாங்கியுள்ளார்.
இதனையடுத்து 15 கலைஞர்களுக்கு கலை இளமணி, கலை சுடர்மணி, கலை நன்மணி, கலை வளர்மணி, கலை முதுமணி ஆகிய பெயர்களில் விருதுகளை வழங்கிய ஆட்சியர் அவர்களுக்கு பொற்கிழி, பாராட்டு பத்திரம் ஆகியவற்றையும் வழங்கி பாராட்டுகளை தெரிவித்துள்ளார். மேலும் இந்த நிகழ்ச்சியில் மதுரை மண்டல கலை பண்பாட்டு மைய உதவி இயக்குனர் செந்தில்குமார் முன்னிலை வகித்த நிலையில் பல்வேறு அதிகாரிகள் கலந்து கொண்டுள்ளனர்.