வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவராக பார்க்கப்படும் ராஷ்மிகா மந்தனா தன்னுடைய மூன்று ஆசைகளை கூறியுள்ளார். பேட்டி ஒன்றில் பேசிய இவர், ஒரு சரித்திர படம், விளையாட்டு மையப்படுத்திய ஒரு படம் மற்றும் ஒரு வாழ்க்கை படத்தில் நடிக்க விரும்புவதாக தெரிவித்துள்ளார். சுல்தான் திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான இவர் தற்போது விஜயின் வாரிசு படத்தில் நடித்து வருகிறார்.
அது மட்டுமல்லாமல் மூன்று பாலிவுட் படங்களிலும் நடித்து வருகிறார். இயக்குனர் ஷங்கர் தெலுங்கு நடிகர் ராம் சரண் வைத்து படம் ஒன்றை இயக்கவுள்ளார். இந்த படம் தமிழ், தெலுங்கு இந்தி என மூன்று மொழிகளில் வெளியாக உள்ளது. இப்படத்தில் இரண்டாவது நடிகையாக ராஷ்மிகா மந்தனாவை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியிருக்கிறது.