3வாரம் மாஸ்க் அணிந்தாலே கொரோனா பரவலின் ஜெயினை பிரேக் அப் செய்ய முடியும் என வல்லுநர் தெரிவித்ததாக சுகாதாரத்துறை செயலாளர் கூறியுள்ளார்.
தமிழகத்தில் அதிகரித்து வரும் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த தமிழக சுகாதாரத்துறை பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. நேற்று செய்தியாளர்களிடம் பேசிய சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், எந்தெந்த வீட்டில் கொரோனா பரவிக் இருக்கிறதோ, அவர் மனிதர் மூலமாதான் உள்ளே வந்திருக்கிறார்.
முதலில் வுகாண் மார்க்கெட்டில் இருந்து பரவியது. ஆனால் இப்போ எப்படி பரவுகிறது என்றால் ? ஒரு மனிதருக்குள் இருக்கிறது ,அவர் வீட்டுக்குள் போகிறார். வீட்டுக்குள் 10 பேருக்கு பரப்புகிறார். எனவே இதை நாம் தடுப்பதற்கு பொதுமக்கள் நுண்கிருமிகளலோடு பரவலை புரிந்துகொள்ள வேண்டும். அந்த பரவலை புரிந்துகொண்டு நாம் மாஸ்க் அணிந்தாளே மூன்று வாரம், எந்த உருமாறிய கொரானவாக இருந்தாலும்.
அதோடு நாம் ஜெயின் பிரேக் அப் அதுதான் நாம் வல்லுனர்களின் கருத்து.அதை தான் நாம் மீண்டும் மீண்டும் வலியுறுத்துகிறோம். கண்காணிப்பாளர்களும், மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள் அந்தந்த மாவட்டத்திற்கு சென்றிருக்கிறார்கள். 15 மண்டல அலுவலர்களும் பணியாற்றிக் கொண்டு இருக்கிறார்கள் என தெரிவித்தார்.