Categories
மாநில செய்திகள்

3வது அலை உச்சத்தில் இருக்கும்போது நீட் தேர்வு… #CancelNEET… ரவிக்குமார் எதிர்ப்பு…!!!

நீட் தேர்வு அறிவிப்புக்கு ரவிக்குமார் தனது எதிர்ப்பை தெரிவித்துள்ளார்.

செப்டம்பர் 12ஆம் தேதி நாடு முழுவதும் நீட் மருத்துவ நுழைவுத் தேர்வு நடைபெறும் என மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் அதிரடியாக அறிவித்துள்ளார். மேலும் நீட் தேர்வுக்கான விண்ணப்பத்தை நாளை மாலை 5 மணி முதல் இணையத்தில் பதிவிறக்கி மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் எனவும் தெரிவித்துள்ளார்.கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இந்த முறை 198 நகரங்களில் நீட் தேர்வு நடைபெற இருப்பதாகவும் அவர் கூறினார்.

இந்நிலையில் நீட் தேர்வு தொடர்பான அறிவிப்புக்கு ரவிக்குமார் தனது எதிர்ப்பை தெரிவித்துள்ளார். “கொரோனா மூன்றாம் அலை உச்சத்தில் இருக்கும் என கான்பூர் ஐஐடியின் ஆய்வில் மதிப்பிடப்பட்டு இருக்கும் செப்டம்பரில் நீட் தேர்வுக்கான தேதியை ஒன்றிய அரசு அறிவித்துள்ளது. மாநில அரசுகளை தான் மதிப்பதில்லை மருத்துவ நிபுணர்கள் இடத்திலாவது அறிவுரை கேட்கலாம் இல்லையா? #CancelNEET” என்று விமர்சனம் செய்துள்ளார்.

Categories

Tech |