கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே தனியார் மருத்துவமனையில் அதிக கட்டணம் கேட்டதால் உயிரிழந்தவரின் உடலை உறவினர்கள் வாங்க மறுத்தனர்.
மார்த்தாண்டம் அருகே உள்ள குன்னம்பாளையம் பகுதியை சேர்ந்த ஒருவருக்கும் அவரது மனைவிக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டு மார்த்தாண்டத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் மருத்துவம் பெற்று வந்தனர். இதில் மனைவி குணமடைந்து வீடு திரும்பிய நிலையில் கணவர் மருத்துவம் பலனின்றி உயிரிழந்தார். இதையடுத்து ராமசாமியின் உறவினர்களிடம் மருத்துவ கட்டணமாக 3 லட்சம் ரூபாய் மருத்துவமனை நிர்வாகம் கேட்டதாக கூறப்படுகிறது.
இதனால் அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் கணவன் மனைவி இருவரையும் ஒரே அறையில் வைத்து மருத்துவம் அளித்ததாகவும் தேவையில்லாத காரணங்களை சேர்த்து அதிக கட்டணம் கேட்பதாகவும் கூறி உடலை வாங்க மறுத்தனர். கொரோனாவால் உயிரிழந்தவரின் உடலை உறவினர்கள் வாங்க மறுத்த நிலையில் மருத்துவமனைகளிலேயே உடல் வைக்கப்பட்டு இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.