நாடு முழுவதும் இன்று கொரோனா தடுப்பூசி போடும் பணியை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.
நாடு முழுவதும் 3000 மையங்களில் கொரோனா தடுப்பூசி போடும் பணியை காணொலி வாயிலாக தொடங்கி வைத்தார் பிரதமர் நரேந்திர மோடி. பின்னர் பேசிய அவர், இந்தியாவில் தயாராகும் தடுப்பூசி தான் உலகிலேயே விலை குறைவானது. இரண்டு தடுப்பூசிகளும் பாதுகாப்பானவை வதந்திகளை நம்ப வேண்டாம். மூன்று மாதங்களில் இந்தியாவில் மூன்று கோடிப் பேருக்கு தடுப்பூசி போடப்படும். தடுப்பூசி பயன்பாட்டுக்கு வந்து இருந்தாலும் கொரோனாவுக்கு எதிரான நமது போராட்டம் தொடர்கிறது. இந்தியாவில் தயாராகும் தடுப்பூசிகள் வெளிநாடுகளில் தயாராகும் தங்களுக்கும் எந்த வகையிலும் தரம் குறைந்தவை அல்ல என மோடி தெரிவித்தார்.