Categories
சென்னை மாவட்ட செய்திகள்

சிபாரிசு கேட்டதால், தவிக்கவிடப்பட்ட 2 வயது குழந்தை.. தாயின் அலட்சியத்தால் பரபரப்பு..!!

இரண்டு வயது குழந்தையை தீக்காயங்களுடன் மருத்துவமனையில் தாய் பரிதவிக்க விட்டு சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு திருவல்லிக்கேணி பகுதியில் வசித்து வரும் லதா என்பவர் சிகிச்சைக்காக வந்திருந்த சமயம், இளம்பெண் ஒருவர் தனது இரண்டு வயது பெண் குழந்தையை முகம் மட்டும் தெரியும்படி துணியால் முடி லதாவிடம் கொடுத்து சிறிது நேரம் பார்த்துக் கொள்ளுங்கள் என கூறிவிட்டு சென்றுள்ளார். ஆனால் வெகுநேரமாகியும் குழந்தையை கொடுத்த பெண் திரும்பி வராத காரணத்தினால் சந்தேகமடைந்த லதா குழந்தையை மருத்துவமனை வளாகத்தில் உள்ள  காவல் நிலையத்தில்  நடந்த விவரத்தை கூறி ஒப்படைத்தார்.

அதனைத் தொடர்ந்து காவல்துறையினர் குழந்தையை பரிசோதிக்க உடலில் தீ காயம் இருப்பதை பார்த்து குழந்தைகள் நல வார்டுக்கு  அழைத்து செல்ல, ஏற்கனவே அந்த குழந்தைக்கு அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டது தெரியவந்ததையடுத்து, வழக்கு பதிவு செய்து காவல்துறைனையினர் விசாரணை மேற்கொள்கையில், குழந்தையின் தாய் வேலூர் மாவட்டத்தில் இருக்கும் ஆம்பூரை சேர்ந்த ரம்யா என தெரியவர, அவரை மருத்துவமனை பதிவேட்டிலிருந்த தொலைபேசி எண் மூலம் தொடர்புகொண்டு காவல்துறையினர் விசாரிக்கையில், ரம்யா இவ்வாறு கூறினார்.

அதில், அப்பளம் பொரிக்கும் போது கணவர் எண்ணெய் சட்டியை தட்டியதால் குழந்தைக்கு தீக்காயம் ஏற்பட்டு விட்டதாகவும், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் குழந்தையை அனுமதித்து பின் மேல் சிகிச்சைக்காக ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்ல, அங்கே  யாரேனும் தெரிந்த நபர்கள் இருந்தால் மட்டுமே சிகிச்சைக்கு அனுமதிக்க  முடியும் என்று மருத்துவமனைநிர்வாகம் கூறவே,

நன்கு பழக்கமான கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையின் காவலாளியை அழைத்து வருவதற்காக குழந்தையை முன்பின் தெரியாத பெண்ணிடம் பார்த்துக்கொள்ளுமாறு கொடுத்து செல்ல வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டதாக தெரிவித்தார். இதனைத்தொடர்ந்து குழந்தையை விட்டுச் சென்ற பெண் ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு வரவழைக்கப்பட்டு அவரிடம் குழந்தையை பத்திரமாக காவல்துறையினர் அதிகாரிகளால் ஒப்படைக்கப்பட்டது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Categories

Tech |