Categories
கிரிக்கெட் விளையாட்டு

2 வது கட்டமாக நியூசிலாந்து வீரர்கள், பயிற்சியாளர்கள்… ஆக்லாந்துக்கு சென்றனர் …!!!

ஐபிஎல் தொடர் ஒத்தி வைக்கப்பட்டதால், வெளிநாட்டு வீரர்களை  சொந்த ஊருக்கு அனுப்பிவைக்கும் பணியில் பிசிசிஐ ஈடுபட்டு வருகிறது.

14வது ஐபிஎல் தொடரில் வீரர்களுக்கு கொரோனா  தொற்று பாதிப்பு ஏற்பட்டதால், காலவரையின்றி ஒத்திவைக்கப்படுவதாக பிசிசிஐ அறிவித்தது. இதனால்  ஐபிஎல் போட்டியில் பங்குபெற்ற, வெளிநாட்டு வீரர்கள் சொந்த நாடு திரும்புவதற்கான, நடவடிக்கைகளை பிசிசிஐ  மேற்கொண்டு வருகிறது. எனவே வாடகை விமானங்கள் மூலம் , வெளிநாட்டு வீரர்களை அவர்களுடைய சொந்த நாட்டிற்கு அனுப்பி வைக்கும் பணியில் பிசிசிஐ ஈடுபட்டு வருகிறது. அந்த வகையில் இன்று காலை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் பயிற்சியாளரான மெக்கல்லம், சிஎஸ்கே அணியின்  பயிற்சியாளர் ஸ்டீபன் பிளமிங், லூக்கி பெர்குசன், நடுவரான கிறிஸ் கஃபானி மற்றும் வர்ணனையாளர்களான  சைடன் டவுல், ஸ்காட் ஸ்டைரிஸ் ஆகியோர் ஆக்லாந்திற்கு சென்றுள்ளனர்.

இதற்கு முன்பாகவே டோக்கியோ வழியாக டிரென்ட், போல்ட் ஆடம் மில்னே பின் ஆலன், ஜிம்மி நீஷம் ஆகிய வீரர்கள் சொந்த நாட்டிற்கு சென்றடைந்தனர். இந்நிலையில் கொல்கத்தா அணியில் இடம்பெற்றுள்ள டிம் செய்பேர்ட் கொரோனா தொற்று  பாதிப்பால், சென்னையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதைத்தொடர்ந்து நியூசிலாந்து வீரர்களான கேன் வில்லியம்சன், மிட்செல் சான்ட்னெர், கைல் ஜேமிசன், பிசியோ டாமி சிம்செக் ஆகிய வீரர்கள் உலக சாம்பியன்ஷிப் டெஸ்ட் இறுதிப் போட்டியில் விளையாடுவதால் மாலத்தீவுக்கு சென்றுள்ளனர்.

Categories

Tech |