Categories
சேலம் மாவட்ட செய்திகள்

2 துண்டுகளான ஆண் குழந்தை…மனதை பதைபதைக்க வைத்த சம்பவம்… இரக்கமற்ற கொலையாளிகள்…!!!

பச்சிளங் குழந்தையை இரு துண்டுகளாக வெட்டி கொலை செய்து விட்டு ஒரு பாகத்தை மட்டும் தேவூர் அருகே வீசிச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகில் ஆலத்தூர் ரெட்டிபாளையம் பகுதியில் உள்ள அருந்ததியர் காலனியில் பழனிசாமி என்கின்ற சின்னத்தம்பி வசித்து வருகிறார். நேற்று மாலை அவரது வீட்டின் அருகில் ஒரு பச்சிளம் ஆண் குழந்தையின் இடுப்புக்கு கீழ் பகுதி மட்டும் துண்டாக வெட்டப்பட்டு இறந்து இருப்பதை கண்டு அதைப் பார்த்த அப்பகுதி மக்கள் மிகவும் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக அவர்கள் ஆலத்தூர் கிராம நிர்வாக அலுவலர் தமிழ் முருகனுக்கு தகவல் தெரிவித்தனர்.

பின்பு, கோவூர் காவல்நிலையத்திற்கு கிராம நிர்வாக அலுவலர் புகார் அளித்தார். புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் விசாரணை நடத்தினர். இடுப்புக்கு கீழ் பகுதி மட்டும் பாதி உடலுடன் இருந்த அந்த ஆண் குழந்தையின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இந்த கொடூர செயலை செய்தவர்கள் யார்? என்று போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். இதைத் தொடர்ந்து, பச்சிளம் குழந்தையின் மீதமுள்ள தலைப்பாக உடல் எங்கு இருக்கிறது? என்று போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். கள்ளக்காதலால் பிறந்த குழந்தையை அதன் பெற்றோர்களே கொன்று விட்டார்களா? அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என்று பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஒன்றும் தெரியாத பச்சிளம் ஆண் குழந்தை இரண்டு துண்டுகளாக வெட்டி கொலை செய்துவிட்டு பாதி உடலை வீசி சென்றதால் அப்பகுதி மக்கள் வேதனையில் உள்ளனர்.

Categories

Tech |