வங்கக் கடலில் புதிய புயல் சின்னம் உருவாகி உள்ளதால் நாகையில் இரண்டாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது.
வங்கக்கடலில் புதிய புயல் சின்னம் ஒன்று உருவாகியுள்ளது. இதற்கு யாஸ் என பெயரிடப்பட்டுள்ளது. இந்த புயல் இன்று மாலை மேற்கு வங்காளம் மற்றும் வழக்கு ஒடிசா பகுதியில் கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும் இந்த யாஸ் புயல் கரையை கடக்கும் நேரத்தில் 165 கிலோ மீட்டர் முதல் 185 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் எனவும் மேற்கு வங்காளம் மற்றும் வடக்கு ஒரிசா கடற்கரையோர மாவட்டங்களில் கனமழை பெய்யும் எனவும் தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக நாகையில் நேற்று முன்தினம் இரண்டாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது.