தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் அறிகுறியுடன் சுமார் 3000 பேர் சிகிச்சை பெற்று வருவதாக சுகாதாரத்துறை செயலாளர் திருமதி பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார்.
சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் காய்ச்சலுக்கான சிறப்பு சிகிச்சை பிரிவில் சுகாதாரத்துறை செயலாளர் திருமதி ஷீலா செய்து ஆய்வு மேற்கொண்டார் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் தமிழகம் முழுவதும் இதுவரை டெங்கு காய்ச்சல் அறிகுறியுடன் 2, 951 பேர் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவித்தார். சென்னையை பொறுத்தவரையில் வட சென்னையில் டெங்கு பாதிப்பு அதிகமாக இருப்பது தெரியவந்துள்ளதாகவும் ,
எனவே அந்தப் பகுதியில் அதிக கவனம் செலுத்தி வருவதாகவும் தெரிவித்தார் . மேலும் அவர் கூறும் போது , வீட்டை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும் அப்போதுதான் அந்த கொசு பரவாது . யாருக்காவது காய்ச்சல் வந்துட்டான்னா உடனே கவர்மெண்ட் ஆஸ்பத்திரிக்கு வந்து ட்ரீட்மென்ட் பண்ணுங்க. இது 100% கிளியர் ஆகும் என்றும் அவர் தெரிவித்தார்.