Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

29,172 பயனாளிகளுக்கு நகை கடன் தள்ளுபடி….. மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட தகவல்…!!!

தமிழக முதல்வர் ஸ்டாலின் கடந்த 2021 ஆம் ஆண்டு செப்டம்பர் 9 ஆம் தேதி அன்று சட்டமன்ற பேரவை விதி எண் 110 கீழ் கூட்டுறவு நிறுவனங்களில் பொது நகை கடன் தள்ளுபடி ஒரு குடும்பத்திற்கு 5 பவுன் மற்றும் அதற்கு கீழ் உள்ள நகை கடன்களை சில தகுதிகளின் கீழ் ஏழை, எளிய மக்கள் பயன்பெறக்கூடிய வகையில் தள்ளுபடி செய்ய வேண்டும் என்று அறிவித்தார்.

அதன்படி இந்த திட்டத்தின் கீழ் கடலூர் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி அதன் கிளைகள் நகர கூட்டுற வங்கிகள், தொடக்க வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கிகள், தொடக்க மேலாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள், நகர கூட்டுறவு கடன் சங்கங்கள், கூட்டுறவு விற்பனை சங்கங்கள் உள்ளிட்ட 181 நிறுவனங்களில் அரசு வழிகாட்டுதலின்படி துறை சார்ந்த அலுவலர்கள் மூலம் தகுதியான பயனாளிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு உரிய முறையில் பயனாளிகளுக்கு நகை கடன் தள்ளுபடி செய்யப்பட்டு உள்ளது. அதற்கான சான்றிதழ் மற்றும் நகைகளை வழங்கப்பட்டுள்ளது. இதனையடுத்து கடலூர் மாவட்டத்தில் 29,172 பயனாளிகளுக்கு ரூ.114.25 கோடி மதிப்பிலான நகை கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் பயனாளிகள் பயனடைந்து முதலமைச்சருக்கு பாராட்டு தெரிவித்துள்ளனர். மேலும் இந்த தகவலை மாவட்ட கலெக்டர் பாலசுப்பிரமணியன் வெளியிட்ட செய்தியில் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |