தமிழக மின் வாரியம் என்எல்சி சோலார் எனர்ஜி கார்ப்பரேஷன் மற்றும் பவர் டிரேடிங் கார்ப்பரேஷன் நிறுவனங்களிடம் 2,900 மெகாவாட் மின்சாரம் கொள்முதல் செய்ய முடிவு செய்திருக்கிறது. இதற்கான ஒப்பந்தம் தலைமைச்செயலகத்தில் முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் கையெழுத்தாகியுள்ளது. நெய்வேலி நிலக்கரி நிறுவன மான என்எல்சி சார்பில் 2400 மெகாவாட் மின் உற்பத்தி திட்டம் ஒடிஷா மாநிலம் என்ற தலபிரா இடத்தில் செயல்படுத்தப்பட இருக்கிறது.
நிலக்கரி சுரங்கம் இதில் 1,500 மெகாவாட் மின்சாரம் தமிழகத்திற்கு ஒதுக்கப்பட்டிருக்கிறது. 2026 -27 ஆண் இந்தத் திட்டம் தொடங்கப்பட உள்ளது இத்திட்டம் நிலக்கரி சுரங்கம் அருகில் இருப்பதனால் மின் கட்டணமாக யூனிட் 3.06 என்று ரூபாய் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வரும் 2026 – 27 ஆம் ஆண்டு முதல் தமிழகத்திற்கு 1500 மெகாவாட் மின்சாரம் கொள்முதல் செய்ய எல்ஐசி நிறுவனத்துடன் மின்வாரியம் ஒப்பந்தம் செய்திருக்கிறது. மேலும் தமிழக மின் வாரியத்திற்கு தனி சுரங்கம் ஒன்று ஒதுக்கப்படும் என்றும் கூடுதலாக 2,500 மெகாவாட் மின்சாரம் ஒதுக்கீடு செய்யப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.
அதேபோல் சோலார் எனர்ஜி கார்ப்பரேஷன் நிறுவனத்தில் இருந்து 1,000 மெகாவாட் சூரிய மின்சாரத்தை ஒரு யூனிட்2.61 துபாய்க்கு வாங்குவதற்கான ஒப்பந்தம் நேற்று கையெழுத்தானது. இந்த மின்சாரம் வரும் நிதியாண்டில் இறுதியில் தமிழகத்திற்கு கிடைக்கும்.தமிழகத்தின் மின் தேவையை கருத்தில் வைத்து மின்வாரியம் பவர் கிரிட் கார்ப்பரேஷன் நிறுவனத்துடன் 4 நடுத்தர கால கொள்முதல் ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு இருக்கிறது. இதன் காரணமாக 400 மெகாவாட் மின்சாரம் ஒரு யூனிட் 3.26 என்ற விலையில் கொள்முதல் செய்யப்பட இருக்கிறது.
இதன் ஒப்பந்த காலம் மூன்று ஆண்டுகள் ஆகும். இந்நிகழ்ச்சியில் அமைச்சர் செந்தில்பாலாஜி தலைமை செயலாளர் இறையன்பு மத்திய நிலக்கரித்துறை செயலாளர் அனில் குமார் ஜெயின் எரிசக்தி துறை கூடுதல் தலைமைச் செயலாளர் ரமேஷ் சந்த் மீனா மின் வாரிய தலைவர் ராஜேஷ் லக்கானி ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.