ஸ்பெயின் தலைநகரில் உள்ள உயிரியல் பூங்காவில் தன்னை 29 ஆண்டுகளாக வளர்த்து வந்த பெண்ணை கொரில்லா ஒன்று கடித்து குதறியது.
ஸ்பெயின் தலைநகர் மாட்ரிடில் உள்ள உயிரியல் பூங்கா ஒன்றில் மலாபோ என்ற கொரிலாவை,அது பிறந்ததில் இருந்தே 29 ஆண்டுகளாக 40 வயதுடைய பெண் ஒருவர் வளர்த்து வருகிறார். அவர் வழக்கம்போல் இன்று அதற்கு உணவு கொடுப்பதற்காக சென்றுள்ளார்.அப்போது மூன்று கதவுகளையும் உடைத்துக் கொண்டு வெளியே வந்த அந்த கொரிலா, அந்தப் பெண்ணை சரமாரியாக கடித்துள்ளது. 20 கிலோ எடை கொண்ட அந்த கொரிலாவிடம் சிக்கிய அந்தப் பெண்ணிற்கு இரண்டு கைகளும் உடைந்து விட்டன.
அது மட்டுமன்றி அவரின் மார்பு மற்றும் தலைப் பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.அவர் தற்போது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.துப்பாக்கி மூலமாக மயக்க ஊசி போட்டு அந்த கொரிலாவை கட்டுப்படுத்தி உள்ளனர். அந்த உயிரியல் பூங்கா தற்போது தற்காலியமாக மூடப்பட்டிருக்கின்றது.