பிறந்ததில் இருந்த வளர்த்த பெண்மணியை கொரில்லா கடித்து குதறிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
ஸ்பெயின் நாட்டின் தலைநகரான மாட்ரிடில் அமையப் பெற்றிருந்த உயிரியல் பூங்காவில் மலபோ என்ற கொரில்லாவை 29 வருடங்களாக பெண்ணொருவர் வளர்த்து வருகிறார். இந்நிலையில் வழக்கம்போல் மலபோவுக்கு உணவு கொடுக்க அந்தப் பெண் சென்றிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக மூன்று கதவுகளையும் அந்த கொரில்லா உடைத்தெறிந்து விட்டு அந்தப் பெண்ணை கடித்துக் குதறி உள்ளது.
200 கிலோ எடை கொண்ட அந்த கொரியாவிடம் சிக்கிய பெண் தலையிலும் மார்பிலும் பலத்த காயம் ஏற்பட்டு அவரது கைகளும் அடைந்துள்ளன. அதன்பிறகு அந்த கொரில்லாவை பூங்காவில் இருந்தவர்கள் மயக்க ஊசி போட்டு கட்டுப்படுத்தி உள்ளனர். பலத்த காயமடைந்த அந்தப் பெண் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் பூங்கா தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.