வருகின்ற 28 மற்றும் 29_ஆம் தேதி கனமழை_க்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை வானிலை ஆய்வு மையம் சார்பில் தெரிவிக்கப்பட்டதில் , இந்திய பெருங்கடல் மற்றும் தென்மேற்கு வங்கக்கடல் சந்திக்கும் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது.
இது புயலாக மாறும் என்றும் , வருகின்ற 28, 29 ஆகிய தேதிகளில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் கனமழை முதல் மிக கனமழைக்கு பெய்ய வாய்ப்புள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.