இந்தியா முழுவதும் இதுவரை 28 கோடி பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
இந்தியாவில் ஒவ்வொரு நாளும் கொரோனா தீவிரமாக பரவி வருவதை அடுத்து பல மாநிலங்களில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருந்தது. இதன் காரணமாக பல மாநிலங்களிலும், தொற்று படிப்படியாக குறைந்து கொண்டு வந்த காரணத்தினால் தளர்வுகளை அந்தந்த மாநிலத்தை சேர்ந்த முதல்வர்கள் அறிவித்து வருகின்றனர். மேலும் ஒவ்வொரு மாநிலத்திலும் தடுப்பூசி போடப்படும் பணி தீவிரமாக செயல்படுத்தப்பட்டு வருகின்றது.
கொரோனா இரண்டாம் அலை நாடு முழுவதும் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்திய நிலையில், இறப்பு விகிதமும் அதிகமாகவே இருந்தது. இந்தியாவில் உருமாறிய டெல்டா வகை வைரசை எதிர்த்து தடுப்பூசி செலுத்தும்படி துரித படுத்தப்பட்டது. மேலும் நேற்றோடு 28 கோடி தடுப்பூசிகள் இந்தியா முழுவதும் செலுத்தப்பட்டு உள்ளதாக சுகாதாரத் துறை அறிவித்துள்ளது.