பிரபல ஹாலிவுட் நடிகர் உடல்நலக் குறைவால் நேற்று முன்தினம் உயிரிழந்தார்.
பிரபல ஹாலிவுட் வில்லன் நடிகர் டோனி சிரிகோ (79) கடந்த 1974-ம் ஆண்டு வெளியான கிரேசி ஜோ என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். அதன்பிறகு தி ஒன் மேன் ஜூரி, பிங்கர்ஸ், லவ் அண்ட் மணி, போப் குயின் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். இவர் கடைசியாக கடந்த 2017-ம் ஆண்டு வெளியான ஒன்டர்புல் வீல் என்ற படத்தில் நடித்தார். அதன்பின் வேறு எந்த படங்களிலும் நடிக்கவில்லை. இவர் தான் நடித்த படங்களில் வில்லன் கதாபாத்திரங்களிலேயே பெரும்பாலும் நடித்துள்ளார். இவர் படத்தில் மட்டுமல்லாது நிஜத்திலும் ஒரு உண்மையான வில்லன் தான்.
இவர் நடிக்க வருவதற்கு முன்பாக வழிப்பறி, பயங்கர ஆயுதங்களை வைத்திருத்தல் போன்ற பல்வேறு குற்ற செயல்களில் ஈடுபட்டுள்ளார். இதன் காரணமாக 28 முறை கைது செய்யப்பட்டார். இவர் மொத்தம் 20 மாதங்கள் சிறையில் இருந்தார். இந்நிலையில் டோனி சிரிகோ தன்னுடைய மகன்கள் மற்றும் பேரக் குழந்தைகளுடன் நியூயார்க்கில் வசித்து வந்தார். இவர் நேற்று முன்தினம் உடல் நலக்குறைவின் காரணமாக உயிரிழந்தார். இவருடைய மரணம் திரையுலகில் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.