சென்னை முழுவதும் 2,75,869 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என மாநகராட்சி ஆணையர் தகவல் அளித்துள்ளார்.
சென்னை மடிப்பாக்கம் மண்டல அலுவலகத்தில் மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் ஆய்வு செய்தார். அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், மாநகராட்சியின் மைக்ரோ பிளான் மூலம் கொரோனோ தடுப்பு பணிகள் நடைபெற்று வருவதாக கூறியுள்ளார். உதவிப் பொறியாளர் தலைமையிலான குழுவில் கூடுதலாக மருத்துவர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
ஒவ்வோரு வார்டுக்கும் 30 முதல் 50 தன்னார்வலர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர் என தகவல் அளித்த அவர், 11 லட்சம் வீடுகள் தினமும் சோதனை செய்யப்படுகிறது. சென்னை முழுவதும் 2,75,869 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என்றும் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் வீட்டிற்கு முன் பிரவுன் வண்ண , தொடர்பில் இருந்தோர் வீடு முன் பச்சை நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளது என விளக்கம் அளித்துள்ளார்.