274 கிராம நிர்வாக அலுவலர்கள் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் என்று அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
வருவாய் துறையில் உள்ள 274 கிராம நிர்வாக அலுவலர்கள் காலி பணியிடங்கள் நிரப்பப்படும் என்று இன்று சட்டப்பேரவையில் அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் தெரிவித்தார். மேலும் 10 வட்டாட்சியர் அலுவலகங்களுக்கு புதிய கட்டடங்கள் கட்டப்படும் என்றும், 50 வருவாய் நிர்வாக அலுவலர்களும் கட்டப்படும் என கூறினார். தமிழக சட்டப்பேரவை நான்கு நாட்களுக்கு பிறகு இன்று கூடிய நிலையில் கேள்வி நேரத்திற்கு பிறகு வருவாய் மற்றும் பேரிடர் வேளாண்மை மானிய கோரிக்கைகள் மீதான விவாதங்கள் நடைபெற்றது.