Categories
தேசிய செய்திகள்

போலீசாருக்கு தண்ணிர் காட்டிவிட்டு… 26 ஆண்டுகளுக்கு பின் சிக்கிய குற்றவாளி…!!

27 வருடங்களாக தேடப்பட்ட குற்றவாளி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

புதுச்சேரி மாநிலத்தில் இருக்கும் காரைக்கால் அருகே வைத்து சிதம்பரத்தை சேர்ந்த 17 பேர் 1989 ஆம் வருடம் பெண்ணொருவரை கடத்துவதற்கு முயற்சித்துள்ளனர். அச்சமயம் திருநள்ளாறு காவல்துறையினர் அவர்களை தடுத்து வழக்குப்பதிந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியது. இந்த விசாரணை தொடர்ந்து நடைபெற்று வந்த நிலையில் 17 பேரில் ஒருவரான சந்திரசேகர் என்பவர் 1993-ஆம் வருடம் காவல்துறையினருக்கு தெரியாமல் தலைமறைவாகினர்.

இதனைத் தொடர்ந்து நீதிமன்றத்தில் அவர் தேடப்படும் குற்றவாளி என அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் சிதம்பரத்தில் சந்திரசேகர் இருப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைக்கப் பெற்றது. அதனை தொடர்ந்து விரைந்து சென்ற தனிப்படை காவல்துறையினர் சந்திரசேகரை கைது செய்து நீதிமன்றத்தில் ஒப்படைத்து சிறையில் அடைத்தனர்.

Categories

Tech |