உலக பணக்காரர்களின் பட்டியலில் முதல் இடத்திலிருக்கும் 50 வயதாகின்ற தொழிலதிபர் எலான் மஸ்க் 27 வயதாகும் நடிகை நட்டாஷாவுடன் காதல் வலையில் சிக்கியுள்ளார்.
உலக பணக்காரர்களின் பட்டியலில் முதலிடத்தில் இருக்கும் எலான் மஸ்க் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் தலைவரும் ஆவார். இவருக்கு கடந்த 2000ம் ஆண்டு ஜஸ்டின் என்பவருடன் திருமணம் முடிந்துள்ளது. இவரை 2008ஆம் ஆண்டு எலான் விவாகரத்து செய்துள்ளார். இதனையடுத்து அவர் டலுலா என்ற நடிகையை 2 தடவை திருமணம் முடித்து இரண்டு முறையும் விவாகரத்து செய்துள்ளார்.
அதன் பின்பு எலான் மஸ்க் கிரீம்ஸ் என்ற பாடகியுடன் லிவ்விங் டுகெதர் ரெலேஷன்ஷிப்பில் இருந்துள்ளார். ஆனால் இவருடனான உறவு 3 ஆண்டுகளில் கசந்துள்ளது. இந்நிலையில் உலக பணக்காரர்களின் பட்டியலில் முதலிடத்திலிருக்கும் 50 வயதாகின்ற எலான் 27 வயதுடைய ஆஸ்திரேலிய நடிகை நட்டாஷாவை காதலித்து வருகிறார். இந்த பேச்சு சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.