சென்னையில் 2,665 கட்டிடங்களின் கட்டுமான பணிகளை நிறுத்துவதற்கு சென்னை மாநகராட்சி அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளது.
சென்னையில் 2665 கட்டிடங்களில் கட்டுமான பணியை நிறுத்த சென்னை மாநகராட்சி சார்பில் இருந்து உத்தரவு ஒன்று பிறப்பிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: அனுமதி இன்றி கட்டப்பட்ட மற்றும் கட்டிட அனுமதி விதிகளை மீறிய புகாரில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விதிமீறல்கள் தொடர்ந்தால் கட்டிடங்களை பூட்டி சீல் வைக்கவும் மாநகராட்சி சார்பில் அதிரடி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.