அரியலூர் மாவட்டத்தில் இதுவரை கொரோனா தொற்றுக்கு 11,303 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 8,550 பேர் பூரண குணமடைந்துள்ளனர்.
அரியலூர் மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பெருந்தொற்றுக்கு புதிதாக 266 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் மாவட்டம் முழுவதிலும் இதுவரை மொத்தமாக பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 11,303 ஆக உயர்ந்துள்ளது. இதனையடுத்து அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் தற்போது 2,612 பேர் சிகிச்சை பெற்று வரும் நிலையில், இதுவரை 8,550 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
இதனைத்தொடர்ந்து இதுவரை கொரோனாவிற்கு சிகிச்சை பலனின்றி 111 பேர் பலியாகியுள்ளனர். மேலும் மாவட்டம் முழுவதிலும் 59 பகுதிகள் தடை செய்யப்பட்டவையாக அறிவிக்கப்பட்டு சுகாதார துறையினர் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். இந்நிலையில் தடுப்பூசி மையங்கள் மூலம் நேற்று ஒரே நாளில் 1,348 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.