Categories
மாநில செய்திகள்

2,600 ஆண்டுகளுக்கு முன் எழுத்தறிவு பெற்ற தமிழர்கள்…. தொல்லியல் ஆய்வு மூலம் வெளிவந்த உண்மை… முதல்வர் ஸ்டாலின் கருத்து…!!!!!!

தொல்லியல் ஆய்வுகள் மூலமாக சுமார் 2600 ஆண்டுகளுக்கு முன் தமிழர்கள் எழுத்தறிவு பெற்றிருந்தனர் என்பது தெரியவந்துள்ளதாக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவையில் இன்று 110 விதியின் கீழ் தொல்லியல் அகழாய்வு பற்றிய புதிய அறிவிப்புகளை முதல்வர் முக ஸ்டாலின் இன்று வெளியிட்டிருக்கிறார். அப்போது அவர் பேசிய போது, புதிய தொழில்நுட்பம் மூலமாக தொல்லியல் மற்றும் அகழாய்வுகள்  பணிகள் நடைபெற்று வருகிறது.

மேலும் தமிழ்நாட்டில் 4,700 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே இரும்பின் பயன்பாடு இருந்திருக்கிறது. 2600 ஆண்டுகளுக்கு முன்பாக தமிழர்கள் எழுத்தறிவு பெற்றவர்களாக இருந்தது உறுதி செய்யப்பட்டிருக்கிறது. அகழாய்வில் கிடைத்த மண்ணை பகுப்பாய்வு செய்யப்பட்டதில், நெல் சாகுபடி செய்யப்பட்டு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது எனவும் தெரிவித்துள்ளார். மேலும் அகழாய்வில் கிடைத்த பானை ஓடுகளில் இருந்து குறியீடுகள், சிந்து சமவெளியுடன் ஒப்பிட்டு ஆய்வு செய்யப்படும் எனவும் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |