நைஜீரியாவில் ராணுவத்தினர் நடத்திய தேடுதல் வேட்டையில் கிளர்ச்சியாளர்கள் 26 பேர் கொல்லப்பட்டனர்.
ஆப்பிரிக்க நாடுகளுள் ஒன்றான நைஜீரியாவில் போகோஹராம், ஐ.எஸ், கிளர்ச்சியாளர்கள் உள்ளிட்ட பல்வேறு பயங்கரவாத அமைப்புகள் செயல்பட்டு வருகின்றது. இந்த பயங்கரவாத அமைப்பினர் பாதுகாப்பு படையினரையும், அந்நாட்டின் பொதுமக்களையும் குறிவைத்து அடிக்கடி தாக்குதல் சம்பவங்களை நடத்தி வருகின்றனர். இந்த தாக்குதல்களுக்கு இதுவரை ஏராளமான மக்கள் பலியாகியுள்ளனர். இதற்கு பதிலடியாக பாதுகாப்பு படையினரும் தக்க பதிலடி கொடுத்து வருகின்றனர்.