வங்க தேச எல்லையில் இருந்து மேற்கு வங்கத்திற்குள் ஊடுருவ முயன்ற 26 பேரை எல்லை பாதுகாப்பு படை அதிரடியாக கைது செய்துள்ளது.
நாடு முழுவதும் தீவிரவாத அச்சுறுத்தல் அதிகரித்து இருந்ததன் காரணமாகவும், தீவிரவாத நடவடிக்கைகளுக்கு எதிராக பாதுகாப்பு நடவடிக்கைகளை அதிகப்படுத்தும் நோக்கிலும் கடந்த வாரத்தில் இருந்தே தொடர்ந்து இந்திய உளவுத்துறையிடம் இருந்து எச்சரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது. தமிழ்நாடு உள்ளிட்ட முக்கிய நகரங்களில் பாதுகாப்பை பலப்படுத்துமாறு உளவுத்துறை எச்சரித்துள்ளது.
இந்நிலையில் வங்கதேச எல்லையில் இருந்து 26 பேர் மேற்கு வங்கத்தில் சட்டவிரோதமாக ஊடுருவ முயன்றுள்ளனர். அச்சமயத்தில் மேற்கு எல்லை பகுதியில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்த நிலையில், மேற்கு வங்க எல்லைப்பகுதி பாதுகாப்பு படையினரிடம் சிக்கிக்கொண்டனர். இதையடுத்து 26 பேரையும் கைது செய்த எல்லை பாதுகாப்பு படையினர், இது கடத்தல் ரீதியான ஊடுருவலா அல்லது தீவிரவாத ஊடுருவலா என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.