ஜப்பான் நாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கிக்கொண்ட 23 பேரை மீட்புக் குழுவினர் பத்திரமாக மீட்டுள்ளனர்.
ஜப்பான் நாட்டில் Atami என்ற பகுதியில் கடும் மழை காரணமாக நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இந்த நிலச்சரிவால் பல வீடுகள் மண்ணில் புதைந்துள்ளது. இதனால் மீட்பு குழுவினர் கடும் மழையையும் பொருட்படுத்தாமல் நிலச்சரிவு சிக்கிக்கொண்டவர்களை மீட்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர் .இந்த நிலச்சரிவில் சிக்கி 3 பேர் உயிரிழந்ததாகவும், வயதான தம்பதிகள் உட்பட 23 பேர் மீட்கப்பட்டுள்ளதாக நகர மேயர் தெரிவித்துள்ளார்.
இந்த நிலச்சரிவில் சுமார் 26 மணி நேரத்திற்குப் பிறகு வயதான தம்பதிகளான இருவரும் பத்திரமாக வைக்கப்பட்டுள்ளனர் . இதுகுறித்து வயதான தம்பதிகள் கூறும்போது, “நிலச்சரிவு ஏற்படும்போது பயங்கரமான சத்தம் கேட்டதாகவும், இதனால் கீழ்த்தளம் வெள்ளத்தால் மூழ்குவதற்கு முன்பாக நாங்கள் இருவரும் மூன்றடுக்கு கட்டிடத்தின் உச்சிக்கு தப்பிச் சென்றதாகவும் “அவர்கள் கூறினர்.