தமிழகத்தில் மொத்தம் 26 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழக கடற்கரையை ஒட்டியுள்ள பகுதிகளில் ஏற்பட்டுள்ள வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக பல்வேறு மாவட்டங்களில் நேற்று முதல் கனமழை பெய்து வருகிறது. சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் மக்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர். மேலும் தமிழகத்திற்கு இன்றும் நாளையும் ஆரஞ்சு அலர்ட் விடுத்து இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
தமிழகத்தில் நாகப்பட்டினம் மாவட்டத்திற்கு ரெட் அலார்ட் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இந்நிலையில் தற்போது மேலும் 26 மாவட்டங்களில் கனமழை பெய்வதற்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் மக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்படுகிறது.