காஞ்சிபுரத்தில் லோக் அதாலத் நடைபெற்றதன் மூலம் 252 வழக்கிற்கு தீர்வுகள் காணப்பட்டுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் தொழிலாளர் நல நீதிமன்றம் அமைந்துள்ளது. இதில் மாவட்ட நீதிபதியான ஜே.சந்திரன் தலைமையில் 5 அமர்வுகளாக லோக் அதாலத் எனப்படும் மக்கள் நீதிமன்றம் கூடியது. இந்த விழாவில் சுமார் 817 வழக்குகள் விசாரணைக்காக எடுக்கப்பட்டது.
இதில் ஒரே நாளன்று 252 வழக்கில் தீர்வு காணப்பட்டுள்ளது. மேலும் 13,67,17,800 ரூபாயை தீர்வு தொகையாக வழங்கியுள்ளது. இதற்கிடையே தலைமை தாங்கிய நீதிபதியான ஜே.சந்திரன் விபத்தில் இறந்த கருணாகரனின் தாயாருக்கு காப்பீடு தொகையாக 12,00,000 ரூபாய் காசோலை சீட்டை வழங்கினார். மேலும் இதில் சில முக்கிய அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.