நாலந்தா மாவட்டத்தில் உள்ள 2,500 ஆண்டுகளுக்கு முந்தைய கற்சுவரை, ‘யுனெஸ்கோ’வின் உலக பாரம்பரிய சின்னங்கள் பட்டியலில் சேர்க்க, மாநில அரசு நடவடிக்கை மேற்கொண்டிருக்கிறது.
பீகாரின் நாலந்தா மாவட்டத்தில் மலைகள் சூழ்ந்த ராஜ்கிர் நகரை பாதுகாக்கும் வகையில் 40 கிலோ மீட்டர் நீளம் உள்ள மிகப் பழமையான கற்சுவர் அமைந்துள்ளது. இந்த சுவர் யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய சின்னங்களில் ஒன்றாக பட்டியலிட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று இந்திய தொல்பொருள் ஆய்வுத்துறைக்கு மாநில அரசு பரிந்துரை செய்திருக்கிறது.
இந்நிலையில் இதுபற்றி தொல்லியல் துறை இயக்குனர் தீபக் ஆனந்த் கூறிய போது, நாலந்தா மாவட்டத்தில் ராஜ்கிர் நகரில் மிகப் பழமை வாய்ந்த 40 கிலோமீட்டர் நீள கற்சுவர் அமைந்திருக்கிறது. இந்த நகரை எதிரி நாட்டுப் படைகளிடம் இருந்து காப்பாற்ற கிமு மூன்றாம் நூற்றாண்டிற்கு முன் இந்த சுவர் கட்டப்பட்டு இருக்கிறது. மேலும் இது யுனெஸ்கோ உலக பாரம்பரிய சின்னங்களில் ஒன்றாக பட்டியலிடும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என அவர் கூறியுள்ளார்.