Categories
அரசியல் மாநில செய்திகள்

2500 அதிமுகவினர் மீது வழக்குப்பதிவு…. பெரும் பரபரப்பு…!!!

அதிமுகவின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைதை கண்டித்து அதிமுக சார்பாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர். அந்தவகையில் அமைச்சர் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைது நடவடிக்கையை கண்டித்து சென்னையில் போராட்டம் நடத்திய முன்னாள் அமைச்சர் கோகுல இந்திரா உள்ளிட்ட 2500 அதிமுகவினர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் போராட்டம் நடத்தியவர்கள் மீது சட்டவிரோதமாக கூடுதல், அரசு அதிகாரியின் உத்தரவை மதிக்காமல் இருத்தல், பொதுமக்களுக்கு தொல்லை கொடுத்தல் உள்ளிட்ட 5 பிரிவுகளில் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Categories

Tech |