விபத்தில் உயிழந்த போலீஸ்காரரின் உடலானது 24 குண்டுகள் முழங்க மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டுள்ளது.
தென்காசி மாவட்டத்திலுள்ள பாரப்பட்டி பகுதியில் சின்னசாமி என்பவர் வசித்து வருகின்றார். இவருக்கு சரஸ்வதி என்ற மனைவி இருக்கின்றார். இவர்களுக்கு சிவகுமார் என்ற மகன் இருந்துள்ளார். இவர் விருதுநகரில் உள்ள தமிழ்நாடு ஆயுதப்படை பிரிவில் போலீஸ் பணியாற்றி வந்துள்ளார்.கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சிவகுமாரின் மனைவி ஜெயா என்பவர் இறந்து விட்டதால் சிவக்குமார் தனது பெற்றோருடன் வசித்து வந்துள்ளார்.
இந்நிலையில் சிவகுமார் சில மாதங்களுக்கு முன்பு ஒரு விபத்தில் சிக்கி பலத்த காயம் அடைந்ததால் மருத்துவமனையில் அனுமதித்து தீவிர சிகிச்சை அளித்து வந்துள்ளனர். இதனையடுத்து மருத்துவமனையில் இருந்து சில தினங்களுக்கு முன்பு வீட்டிற்கு சென்ற சிவகுமாருக்கு மீண்டும் உடல்நிலை பாதிக்கப்பட்டு பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இது குறித்து தகவல் அறிந்த மாவட்ட ஆயுதப்படை பிரிவு போலீசார் அஞ்சூர் தலைமையில் பிற போலீஸ்காரர் சிவகுமாரின் உடலுக்கு மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்திய பிறகு 24 குண்டுகள் முழங்க அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது.