சென்னையில் கொரோனா பாதிப்பால் இன்று ஒரே நாளில் 24 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நேற்று கடந்த இரண்டு நாட்களாக தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 2ஆயிரத்தை தாண்டியுள்ளது. மொத்தமாக கொரோனாவுக்கு 52,334 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 625 பேர் உயிரிழந்துள்ளனர்.
கொரோனாவின் மையமாக தலைநகர் சென்னை திகழ்கின்றது. அங்கு மட்டும் 37ஆயிரத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டு, உயிரிழப்பு 498ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில் இன்று மேலும் 24 பேர் சென்னையில் மட்டும் உயிரிழந்துள்ளனர்.
சென்னை தனியார் மருத்துமனையில் சிகிச்சை பெற்று வந்த 5 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வந்துள்ளது. ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை 7, ஓமந்தூரார் அரசு மருத்துவமனை 5 , ஸ்டான்லி அரசு மருத்துவமனை 4, கீழ்பாக்கம் அரசு மருத்துவமனை 3 பேர் மரணம் அடைந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.