கர்நாடகாவில் ஆரம்பப் பள்ளிகளில் பயிலும் 24 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து அப்பள்ளிகள் மூடப்பட்டுள்ளன.
கர்நாடக மாநிலம் மேளகாவி மற்றும் கலப்பூரை ஆகிய மாவட்டங்களில் உள்ள ஆரம்ப பள்ளிகளில் பயின்று வந்த 24 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து அப்பள்ளிகளில் மாவட்ட கல்வி அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
அப்போது அவர்களை பெற்றோர் முற்றுகை இட்டனர். கொரோனா பரவல் காலத்தில் பள்ளிகள் திறக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து மறு உத்தரவு வரும் வரை இப்பகுதியில் ஆரம்ப பள்ளிகள் மூடப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.