Categories
உலக செய்திகள்

சிறை பிடிக்கப்பட்ட தமிழக மீனவர்கள்… நிபந்தனைகளுடன் விடுவித்த இலங்கை அரசு…!!!

இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 24 மீனவர்கள் விடுவிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

புதுக்கோட்டை மாவட்டத்தில் இருக்கும் ஜெகதாப்பட்டினம், கோட்டைப்பட்டினம் ஆகிய பகுதிகளை சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் 300க்கும் அதிகமான விசை படகுகளுடன் கடந்த நவம்பர் மாதம் 28ஆம் தேதி அன்று மீன் பிடிப்பதற்காக சென்றிருக்கிறார்கள்.

இலங்கை கடற்படையினர் அந்த சமயத்தில் சோதனை பணியை மேற்கொண்டிருந்த நிலையில், எல்லையைத் தாண்டி சென்றதாக கூறி ஐந்து விசை படகுகளை கைப்பற்றியதோடு, மீனவர்கள் 24 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்நிலையில் அந்த மீனவர்களை நிபந்தனைகளின் அடிப்படையில் விடுவிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது.

அதன்படி, அந்த மீனவர்கள் இலங்கை எல்லைக்குள் பத்து வருடங்கள் வரக்கூடாது என்று நீதிமன்றம் தடை அறிவித்திருக்கிறது. விடுவிக்கப்பட்ட மீனவர்கள் விரைவாக நாடு திரும்புவார்கள் என்று கூறப்பட்டிருக்கிறது.

Categories

Tech |