தேனியில் விவசாயி வீட்டில் 24 பவுன் நகை 80,000 ரூ பணம் கொள்ளை போன சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தேனி மாவட்டம் சின்னமனூர் பகுதியை அடுத்த எரசக்கநாயக்கனூர் ஊரை சேர்ந்தவர் சமுத்திரவேல். இவர் விவசாய தொழில் செய்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் இரவு குடும்பத்தினருடன் தனது உறவினர் வீட்டிற்கு செல்ல, அதனை நோட்டமிட்ட மர்மநபர்கள் வீட்டின் பூட்டை உடைத்து நகை பணம் உள்ளிட்டவற்றை திருடிச் சென்றுள்ளனர்.
இந்நிலையில் காலை தனது வீட்டிற்கு வந்த சமுத்திரவேல் வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்து சின்னமனூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின்பேரில் அப்பகுதிக்கு விரைந்து வந்த அதிகாரிகள் விசாரணை மேற்கொள்கையில்,
24 பவுன் நகை, 80,000ரூ பணம், நான்கு ஜோடி வெள்ளி கொலுசு ஆகியவை திருடு போயிருப்பது தெரிய வந்தது. இதையடுத்து கைரேகை நிபுணர்களால் அங்கிருந்த கைரேகைகள் சேகரிக்கப்பட்டு காவல்துறையினரால் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இச்சம்பம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.