Categories
மாநில செய்திகள்

24 மாவட்டங்களில் அதிகரிப்பு… வெளியான பரபரப்புத் தகவல்..!!

கொரோனா தொற்று காரணமாக தமிழகத்தில் 24 மாவட்டங்களில் அதிகளவு கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் உருவாகியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்து
கொண்டே உள்ளது. இதனை கட்டுப்படுத்த பல்வேறு கட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தமிழக அரசு செய்து வருகின்றது. இந்த நடவடிக்கைகளில் கொரோனா தொற்று கட்டுக்குள் வரவில்லை என்றால் ஊரடங்கு அமல்படுத்த வாய்ப்புள்ளதாக தகவல் கூறப்படுகின்றது.

மேலும் தற்போது 24 மாவட்டங்களில் அதிக அளவு கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் உருவாகியுள்ளதாக தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன் தெரிவித்துள்ளார். சென்னை போன்ற பெருநகரங்களில் அடுக்குமாடி குடியிருப்புகளில் வசிக்கும் பலருக்கும் தொற்று அபாயம்  உருவாகியுள்ளதாகவும் கட்டுப்பாடு பகுதிகள் விரைவில் ஆயிரத்தை தாண்டும் என்றும் அவர் கூறினார். இதனால் விரைவில் ஊரடங்கு அறிவிக்க வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது என்றும் அவர் தெரிவித்தார்.

Categories

Tech |