Categories
அரசியல் மாநில செய்திகள்

24 மணி நேரமும் வேலை செய்யணும்…. அமைச்சர் போட்ட அதிரடி உத்தரவு…!!!!

தமிழக மக்களுக்கு தடையில்லா மின்சாரம் வழங்குவது குறித்து மின்வாரிய தலைமை அலுவலகத்தில் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதன்பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் செந்தில்பாலாஜி, பராமரிப்பு பணியின் போது மட்டும்தான் மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.

சமூகவலைதளங்களில் மின் பாதிப்பு குறித்து மின்சார வாரியத்தை டேக் செய்பவர்கள் தங்களுடைய இணைப்பு எண்ணையும் சேர்த்து பதிவிட வேண்டும் என்று தெரிவித்துள்ளார். மேலும் நிலக்கரி கொள்முதல் செய்ய ஓரிரு நாட்களில் டெண்டர் புள்ளி தொடங்கப்படும். கோடைகாலத்தில் 24 மணி நேரமும் மின்துறை ஊழியர்கள் பணி செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.

Categories

Tech |