வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் தமிழகம் முழுவதும் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.சாலைகளில் மழை நீர் வெள்ளம் போல தேங்கியுள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.மக்களுக்கு வேண்டிய அனைத்து உதவிகளையும் உடனே செய்து தர அனைத்து அதிகாரிகளுக்கும் முதல்வர் ஸ்டாலின் அதிரடியாக உத்தரவிட்டுள்ளார். அதுமட்டுமல்லாமல் மழை வெள்ள பாதிப்புகள் குறித்து புகார் தெரிவிக்க கட்டுப்பாட்டு மையங்கள் ஆங்காங்கே அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன.
இந்நிலையில் பருவமழை குறித்து பொதுமக்கள் புகார் அளிக்க 24 மணி நேரமும் இயங்கக்கூடிய கட்டுப்பாட்டு அறை எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி 044-25619204, 044-25619206, 044-25619207, 044-25619208, 044-25303870, 1913 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம். வாட்ஸ்அப் எண்கள்: 9445025819, 9445025820, 9445025821, 9445477205 , திருச்சி- 9384056213, நாகை- 8438669800, தஞ்சை- 1070, மயிலாடுதுறை- 04364222588, கள்ளக்குறிச்சி – 04151228801, புதுச்சேரி- 1077 ஆகிய எண்களில் மக்கள் புகார் அளிக்கலாம் என்று அரசு அறிவித்துள்ளது.