பீகார் மாநிலத்தில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு அரசாங்கம் சார்பில் சீருடைக்கு பணம் கொடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் அராரியா மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளியில் படிக்கும் மாணவி ஒருவருக்கு சீருடைக்கான பணம் வராததால் அந்த மாணவியின் தந்தை பட்டாகத்தியுடன் பள்ளிக்கு வந்து தனது மகளுக்கு பணம் வராததைக் குறித்து கேட்டுள்ளார்.
மேலாடை இன்றி வந்த அவர் 24 மணி நேரத்துக்குள் பணத்தைக் கொடுக்காவிட்டால் நாளை மீண்டும் வருவேன் என எச்சரிக்கை விடுத்தார். இதைத் தொடர்ந்து அந்த நபர் மேல் வழக்கு பதிவு செய்து அவரை போலிஸார் தேடி வருகின்றனர். இந்த மிரட்டல் தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.